டீக்கன்மார்களை நியமித்தல் Ordaining of Deacons 58-07-20E பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. ஆகவே, அது தான், அது முதலாவதாக சபைக்குள்ளாக சில உதவிக்காரர்களை, டீகன்மார்களை (Deacons) வைப்பது தான். இங்கேயுள்ள நம்முடைய சிறு சபையானது தனியுரிமை ஆட்சியுடையது. அதற்கு எந்த ஒரு ஸ்தாபனமோ அல்லது வேறொன்றோ கிடையாது. அது தனக்கு உதவிக்காரர்களை, மகன்மார்களை தெரிந்தெடுத்துக் கொள்கின்றது. அது தன்னுடைய மேய்ப்பரை தெரிந்தெடுத்துக் கொள்கின்றது, அது தன்னுடைய தர்மகர்த்தாக்களை தெரிந்தெடுத்துக் கொள்கின்றது, சபைக்கு உள்ளே அல்லது வெளியே வருகின்ற எல்லாவற்றையுமே அது தெரிந்தெடுக்கின்றது. எந்த ஒரு காரியத்தின் மேலும் செல்வாக்கு கொள்ள எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை, அது சபையாகும். சபைக்கு வந்து, தங்களுடைய இருத்தலினாலும் தங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகளினால் சபையைத் தாங்குபவர்கள் தான் சபையாகும், இவ்விதமான உதவிக்காரர்களை, டீக்கன்மார்களை வைத்தல் போன்றவற்றில் செல்வாக்குடையவர்கள் இவர்களே ஆவர். 2. மேலும் முன்னாள் உதவிகாரர்கள் (Deacons) குழுவிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், நான் இங்கிருந்து இந்த முழு சபையின் சார்பாக இதைக் கூறுகிறேன். அந்த சகோதரர்களில் யாராவது இங்கிருப்பார்களாயின், சகோதரன் காக்ஸ், சகோதரன் ஃபிளீ மேன், சகோதரன், ஹிக்கின்போத்தம் மற்றும் சகோதரன்.டீட்ஸ் மேன், அவர்கள் நமக்கு, கர்த்தருக்கு, இந்த கூடாரத்தில் நல்ல ஒரு சேவையை செய்தனர். 3. ஆகவே ஒவ்வொரு தடவையும், சபையின் உபசட்டத்தின்படியும், ஒவ்வொரு வருடமும் உதவிக்காரர்கள் (Deacons) அல்லது தர்மகர்த்தாக்கள் தானாகவே தங்களுடைய காலத்திற் கேற்றவாறு அமர்த்திக் கொள்வார்கள். அவர்கள் திரும்பவுமாக வரவிரும்பினால், சரி. திரும்பவுமாக இருக்க அவர்களுக்கு விருப்பமில்லையென்றால், இந்த குழு ராஜினாமா செய்ததென்றால் அப்பொழுது தங்கள் இடங்களில் மற்ற ஒருவரை அமர்த்தலாம். 4. முந்தைய இரவு நான் தர்மகர்த்தாக்களின் குழுவை- புதிய தர்மகர்த்தாக்கள் குழு இருக்கிறது. அதை அழைத்தேன், நான் சகோதரன் லூத்தர் மெக்டோலை இங்கே இன்றிரவில் பார்த்தேன், அவர் முன் இருந்த தர்மகர்த்தாக்களின் குழுவில் இருந்தார், அவரை உள்ளே காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த வாரத்தில் நான் சென்று சபைக்கு அளிக்கப்பட வேண்டிய ஜெராக்ஸ் நகல் எடுக்கப்பட்டு விட்டதா என்று கண்டறிய சென்றேன். இப்பொழுது சபையின் தர்மகர்த்தாக்கள் சகோதரன் வில்லியம் மார்கன், சகோதரன் மைக் ஈகன், சகோதரன் பாங்க்ஸ் உட், மற்றும் சகோதரன் ராய் ராபர்சன் ஆவர். இந்த இரண்டு நகரங்கள் நடுவில் வசிக்கின்ற சகோதரன் ராய் ராபர்சனைத் தவிர, ஏனையோரெல்லாம் இந்த நகரத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்த மனிதர் சரியானவர்கள் என கர்த்தர் கண்டார், மேலும் கனம்மிக்க மதிப்பிற்குரிய மனிதரான இவர்கள், இப்பொழுது, இந்த சபை தர்மகர்த்தாக்களின் பணியை பெற்றுள்ளனர். 5. ஆகவே இந்த கூட்டமானது நடைபெற்றுக் கொண்டிருக்கையில், உதவி மேய்ப்பர் எங்களிடம்... இவர்களுடைய பணிக்காலம் முடிவுற்று, இராஜினாமா செய்து விட்டனர்- ஆகவே புதிய உதவிக்காரர், டீகன்மார்கள் குழுவை தேர்ந்தெடுக்க, இன்னும் சில உதவிக்காரர், டீகன்மார்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிருக்கின்றது. இப்பொழுது சபை... அந்த விதமாகத் தான் இது செய்யப்பட்டிருக்கின்றது, - ஐக்கியப்பட்டிருக்கின்றவராக இருந்து, மதிப்பிற்குரியவராகவும் நற்புத்தியுள்ள மனிதனாக இருக்கின்ற மனிதனையே குழுமமானது (board) உதவிக்காரர்களாக, டீகன்களாக நியமிக்கும். 6. ஒரு உதவிக்காரனுடைய, டீகனுடைய அலுவலானது மிகவும் மகத்தான ஒரு அலுவலாகும், ஊழியமாகும் - மேலும் சபையில் ஒரு உதவிக்காரனாக, டீகனாக இருப்பது தேவனுக்கு ஒரு மகத்தான கனமாக இருக்கிறது. ஆகவே கடந்த இரவு கூட்டத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதர் என்னிடம் கொண்டு வரப்பட்டார். மேய்ப்பருடனான கூட்டத்தில், அடுத்த ... இவர்களெல்லாம் மதிப்புமிக்கவர்களும் நீதியுள்ள மனிதர் என்று கடந்த வெள்ளியன்று, இந்த மனிதர் ஒப்புக் கொண்டார். 7. அவர்கள் கண்டெடுத்த ஒரு இளம் மனிதன், முற்றிலுமாக தகுதியில்லாதவராக இருந்தார் (அவர் சரியான மனிதன் அல்ல என்பதனால் அல்ல) நம்முடைய தர்மகர்த்தாக்களின் குழுவைச் சார்ந்த கனம் மிக்க ஒரு மனிதனால் இவர் குறிப்பிடப்பட்டிருந்தார். ஆனால் நானும் மேய்ப்பரும் ஒன்று சேர்ந்து இந்த இளம் மனிதனின் வயதைக் கேட்டோம், இவருடைய வயது - இருபதுகளின் தொடக்க வருடங்களில் இருந்தார். கனம் மிக்க, நீதியான, மற்றும் உண்மையுள்ள மனிதனாக இருந்தார், ஆனால் அவர் திருமணமாகாதவராக இருந்தார். ஒரு உதவிக்காரன், மக்கள் விவாகமான மனிதனாக இருக்க வேண்டுமென்று வேதாகமம் கட்டளையிடுகின்றது. அவன் ஒரே மனைவியையுடைய புருஷனாய் இருக்க வேண்டும். 8. அதன் பிறகு, ஒரு சகோதரன் குறிப்பட்டது போல, இன்னொரு மனிதன் மிகவும் தகுதி வாய்ந்தவராகவும் இருந்தார், மிகவும் உத்தமமுள்ள மனிதனாக இருந்திருப்பார். காரியத்தை விசாரித்த பிறகு, அந்த சகோதரன் இந்த விசுவாசத்திற்குள் மிக சமீபத்தில் வந்தவராக இருந்தார், அவருடைய மனைவி இதை விசுவாசிப்பதில்லை என்றும் கண்டறியப்பட்டது. அப்படியானால் ஊழியத்தில் அந்த மனிதனை அது தகுதியற்றவராகச் செய்கிறது. ஏனெனில் அவர் தன்னுடைய முழு குடும்பத்தையும் கீழ்ப்படியப் பண்ணுகிறவராக இருக்க வேண்டும், அவர்களும்கூட விசுவாசத்தில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஒரு முரண்பாடாக இருக்கும். 9. ஆகவே நாம் இப்பொழுது கட்டிக் கொண்டிருக்கிறோம் மற்றும் இந்த சபையை சரியாக பொருத்த விரும்புகிறோம். சபையின் பொது கண்காணி என்கின்ற முறையில், நான் இது வேதப்பூர்வமாக, ஒவ்வொன்றும் சரியாக வார்த்தையின் மேல் வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியவனாக இருக்கிறேன். 10. ஆகவே இந்த மனிதர், இந்த ஊழியத்தை ஏற்றுக் கொள்ள மனதுடையவர்களாயிருப்பதை உணர்ந்தால், சேவை செய்யலாம். ஒருக்கால் தேவன் அவர்களை அழைத்திருக்கிறார் என்று உணர்கிறார்களா என்று பார்க்கத்தக்கதாக சிறிது காலத்திற்கு இவர்கள் வருவார்கள். பிற்பாடு, தாங்கள் தகுதியிழந்தவர்கள் என்று அவர்கள் உணர்ந்தால், அப்பொழுது, அடுத்த சில வாரங்களில் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய இவர்களுக்கு உரிமையுண்டு, பிறகு தங்களுடைய இடங்களில் வேறு ஒருவர் நியமிக்கப்பட ஏதுவாக இருக்கும். 11. ஆனாலும், எழுப்புதலின் ஆரம்பத்தில், (தேவனுக்கு சித்தமானால்) சற்று ஓய்வெடுத்த பிறகு, இந்தக் கூடாரத்தில் இங்கே, அப்பொழுது நான் அப்பொழுது நான்... இந்த சபையில் இந்த உதவிக்காரர், டீக்கன்கள் மேல் கைகளை வைத்து நாங்கள் அபிஷேகிப்போம், இவர்கள் எப்படி இதை விரும்புகின்றனர் அல்லது சபையோர் எப்படி இதை விரும்புகின்றனர் என்று பார்க்க வேண்டும். பிறகு அது - அது இரண்டு பக்கங்களிலிருந்தும் சரியானது என்பதாக காணப்படுமானால், அப்பொழுது இந்த மனிதரை அபிஷேகிக்கப்பட்ட உதவிக்காரராக, டீக்கன்மாராக ஆக்குவோம், தர்மாகர்த்தாக்களும் இதே விதமாகத்தான் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். 12. இது தேவனுடைய வார்த்தையின்படி சபையினுடைய சட்டமும், தனியுரிமையும் ஆகும். ஆதலால் ''இந்த மனிதன் சரியான நபராக இருப்பான் என்று நான் நினைக்கிறேன்” “இந்த மனிதன் சரியான நபராக இருப்பார் என சகோதரன் நெவில் எண்ணுகிறார்” அல்லது “இந்த மனிதன் சரியான நபராக இருப்பார் என்று தர்மகர்த்தாக்களின் குழு நினைக்கிறது'', என்று அவர்களால் கூற முடியாது, அது அவ்வாறே அல்ல. அது சபையால் மாத்திரமே இருக்க வேண்டும்-! யாரும் இங்கே தன்னுடையதை மாத்திரம் செய்வதில்லை. அது சபையின் ஓட்டு ஆகும். அது தனியுரிமை உடைய சபையாகும். 13. பழைய உபசட்டங்களின் பிரதிகள் 1937 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் அழிந்து போயின. அவைகளை நாங்கள் மறுபடியுமாக எழுதியுள்ளோம், தர்மகர்த்தாக்கள், உதவிக்காரர் (டீக்கன்மார்கள், பொருளாளர், இன்னும் மற்றோர், மேய்ப்பர், உதவி மேய்ப்பர், இன்னும் மற்றோர் ஆகியோரின் பணிகளை பற்றி இங்கே விரைவில் அது சுவற்றில் தொங்கவிடப்படும். 14. தேவனுடைய கிருபையால், இந்த சபையின் குழுமத்தினூடாக நூறு சதவீத வாக்குகள் மூலம் சகோதரன் ஹாலின் ஹிக்கர்சன், நீதியுள்ள, கனம் பொருந்திய மனிதனாகவும், இந்த கூடாரத்தின் உதவிக்காரர் (டீக்கன்) என்கின்ற மகத்தான கனத்தை - பொறுப்பை பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார் என்று அவர்கள் கண்டுள்ளனர் என்று என்னிடம் கூறப்பட்டுள்ளது. 15. மேலும், குழுமத்தின் வாக்களிப்பின் மூலமாக, சகோதரன் காலின்சும் ஒருகனம் மிக்க, நீதியுள்ள மனிதரென்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு ஊழியக்காரனாக அவர் இருப்பதால், சபையில் உதவிக்காரராக (டீக்கன்) இருக்கும் படியாக நாங்கள் அவரை அழைக்கிறோம், ஒரு உதவிக்காரராக (டீக்கன்) மாத்திரமேயல்ல, ஆனால் சகோதரன் நெவிலுக்கு உதவியாளராக மேலும் ஞாயிறு பள்ளி வகுப்புக்கு (Sunday school class) அல்லது சகோதரன் நெவிலுக்கு பதிலாக இருப்பதற்காக, அல்லது சகோதரன் நெவிலுக்கு எந்த விதத்திலெல்லாம் உதவியாளராக இருக்க முடியுமோ அந்த விதத்தில் அவர் இருப்பார். அது சகோதரன் காலின்ஸ் ஆகும். 16. மேலும், சகோதரன் டோனி-சேபில் ஒரு கனம் மிக்க, நீதியுள்ள மனிதரென்று சபையானது கண்டெடுத்துள்ளது, மேலும் இந்தக் கூடாரத்தின் உதவிக்காரர் (டீக்கன்) பதவியை பெற்றுக் கொள்ள அவரை அழைக்கத்தக்கதாக தர்மகர்த்தாக்கள் குழு மற்றும் மேய்ப்பர்கள் ஆகியோரிடமிருந்து ஆதரவுக் குறிப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 17. மேலும் மற்றும் இதுவும் கூட சொல்லப்பட்டு, நம் மத்தியில் ஒரு கனம்மிக்க நபர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.... (இல்லை.... இவர்கள் தான் கனம் மிக்க நபர் என்றல்ல, ஆனால் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாத்திரமே) ஹென்றிவில், அல்லது மெம்ஃபிஸைச் சார்ந்த சகோதரன் டெய்லர், அது இண்டியானாவிலுள்ள மெம்ஃபிஸ் என்று நான் நினைக்கிறேன். அவர் சில காலமாக நம்முடனே இருக்கின்றார், வாயில் காப்போனாக மற்றும் என்னவெல்லாமாக இருக்க முடியுமோ அவ்விதமாக இருந்தார். இவர் இந்த கூடாரத்தின் உதவிக்காரராக (டீக்கன்) இருக்கின்ற மகத்தான பதவியை ஊழியத்தை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக சபை அல்லது குழுமம் மற்றும் மேய்ப்பரின் அனுகூலத்தை பெற்றுள்ளார். 18. இன்னுமாக சகோதரன் மைக் ஈகனுடைய மருமகனான சகோதரன் - சகோதரன் பாப் ஹார்னார்ட், கனம் மிக்க பொறுப்பாகிய கனமும் நியாயமும் தேவைப்படுகின்ற இந்த சபையின் பொருளாளர் பதவியை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக குழுமத்தாலும் மற்றும் மேய்ப்பராலும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். 19. இதைச் செய்வதினால் என் சகோதரரே, இங்கிருந்து உங்களை அழைப்பது உங்களுக்கு அது ஒரு மகத்தான கனமாக இருப்பது மாத்திரமல்ல, ஆனால் ஏதோ ஒன்றைச் செய்யத் தக்கதாகவும் அது இருக்கு மென்று நான் நினைக்கிறேன். 20. இந்த நேரத்தில், நம்முடைய உடனுழைப்பாளரான சகோதரன் நெவில் அவர்கள், உதவிக்காரராக (டீக்கன்) இருக்க, அதற்கு அவசியமாயுள்ளவைகளை- வாசிப்பார். சகோதரன் நெவில், அதை தேவனுடைய வார்த்தையிலிருந்து வாசிப்பார் (சகோதரன் நெவில் 1 தீமோத்தேயு 3:8-13ஐ வாசிக்கின்றார் - ஆசி): அந்தபடியே, உதவிக்காரரும் இரு நாக்குள்ளவர்களாயும், மது பானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாயும், விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக் கொள்ளுகிறவர் களாயும் இருக்க வேண்டும். மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ் சாட்டப்படா தவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ் செய்யலாம். அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாத வர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர் களுமாயிருக்க வேண்டும். மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்த குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாய் இருக்கவேண்டும் இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். 21. ஆமென். இந்த நேரத்தில், அழைக்கப்பட்டிருக்கின்ற சகோதரர், இங்கே சற்று நேரம் மேலே மேடையை நோக்கி வரும்படியாய் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை சற்று தாழ்த்துகையில் இவர்கள் தாமே... இது என்னவென்பதை சபை அறியும், அது தாமே உங்களுடைய உதவிக்காரர் (டீக்கன்மார்) குழுவையும் மற்றும் உங்கள் பொருளாளரையும் தேர்ந்தெடுப்பதாகும். 22. கர்த்தராகிய இயேசுவே, தெளிந்தவர்களாய், தேவ சிந்தனையுடையவர்களாக இப்பொழுது உம்மிடம் நாங்கள் வருகிறோம். உம்முடைய மிகுந்த பரிசுத்த வார்த்தைக்கு மரியாதையாக நாங்கள் வருகிறோம், ''ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் தவறாயிருப்பதாக, ஆனால் தேவனுடைய வார்த்தை சத்தியம்'' என்று விசுவாசித்துக் கொண்டு நாங்கள் வருகிறோம். இயேசு தம்முடைய சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே சம்பாதித்த இந்த சபைக்காவும், நாங்கள் ஆராதிக்க இந்த கட்டடத்தை எங்களுக்கு அளித்ததற்காகவும் உமக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 23. இந்த மகத்தான மந்தையின் கண்காணிகளாக, அப்படி இருக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் எங்களை நியமித்திருக்கிற வேளையில், ஆவியில் நிரப்பப்பட்டு, ஊழியத்திற்கு, பணிக்கு தயாராயிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிற உத்தமமான, நீதியுள்ள மனிதரை, இந்த சபையாருக்கு அளிக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உதவிக்காரர், டீக்கன்களைக் குறித்து ''நீங்கள் சென்று விதவைகளையும் அனாதைகளையும் விசாரிக்கவும், சபையின் நற்காரியங்களைக் கவனிக்கவும் இவ்விதமான வேலைக்காக பரிசுத்த ஆவியும் நற்சாட்சிப் பெற்றிருப்பவரை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,'' என்று சொல்லப்பட்டிருக் கின்றது. வருடங்கள் கடந்தபின், மகத்தான பரிசுத்த பவுல்,, பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு அந்த ஸ்தானத்தின் தேவை என்னவென்று நாங்கள் சற்று முன் வாசித்ததை பிரகடனம் செய்தான். 24. தேவனே, இந்த மனிதரை கெளரவித்தருளும். இப்பொழுது, கர்த்தாவே, ஒரு தனியுரிமை கொண்ட சபையாய், கர்த்தராகிய இயேசுவின் சரீரமாக, அவர்கள் தேர்ந்தெடுத்தலைச் செய்வார்கள், இது தேர்வுரிமையாகும். பிறகு (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).... அந்த நீதியுள்ள பரிசுத்த நாமமாகிய இயேசுவில், ஆராதனையின் இந்த பாகத்தை விசேஷித்த விதத்தில் நடத்துவார். 25. இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், நம்முடைய தலைகள் மாத்திரமல்ல நம்முடைய இருதயங்களும் கூட, இந்த சபையின் ஒவ்வொரு அங்கத்தினர் என்கிற வகையில்.... இங்கே தவறாமல் வந்து, தங்களுடைய தசமபாகத்தினாலும் மற்றும் காணிக்கைகளாலும் இதை தாங்குகின்றவர்கள், இவர்கள் சபையின் அங்கத்தினர்களாக கருதப்படுகிறவர்களாவர். நானும், மற்றும் உதவி மேய்ப்பர் (சகோதரன் நெவிலும்) இதைக் கவனிப்போம். உங்களுக்கு தெரிந்தவரையில், இந்த மக்கள் கூட்டத்திற்கு உதவிக்காரராக, சகோதரன் டெய்லர் நியாயமான மனிதனென்றும் தகுதியுள்ளவரென்றும், டீக்கனாக இருக்கலாம் என இந்த சபையானது காண்கிறதா என்று நான் கேட்கிறேன்? அப்படியென்றால் உங்கள் கைகளை உயர்த்தி தெரிவியுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் சற்று நேரம் இடையே சிறிது நிறுத்துகிறார் -ஆசி) அல்லது முரண்பாடாக இருக்கிறதென்றால், உங்கள் கையை உயர்த்துவீர்களா? (சகோதரன் பிரன்ஹாம் அமைதலாகுகிறார்ஆசி) உங்களுக்கு நன்றி. 26. இந்த சபையின் அங்கத்தினர்கள் எவராவது இங்கே... எல்லாரும் சகோதரன் ஹாலின் ஹிக்கர்சன் நியாயமுள்ள, கனம் மிக்க மனிதனாக, மற்றும் இந்த சபையின் உதவிக்காரராக, டீக்கனாக ஆவதற்கு உங்கள் கண்களில் பாத்திரவானாக இந்த மனிதன் காணப்படு கின்றாரா-? இதை ஆமோதிக்கும் வகையில் உங்கள் வலது கரத்தை உயர்த்துங்கள் (சகோதரன் பிரன்ஹாம் சிறிது நேரம் இடையே சற்று நிறுத்துகிறார் - ஆசி) அல்லது அதற்கு முரண்பாடாக இருந்தால், அப்படியானால் உங்கள் கையை உயர்த்துங்கள். (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார் - ஆசி) 27. சகோதரன் காலின்ஸ் அதே விதமாக, ஒரு நீதியுள்ள மனிதனென்றும், இந்த சபையின் உதவிக்காரராக, டீக்கனாக ஆவதற்கு உங்கள் கண்களில் பாத்திரவானான மனிதனாக இந்த சபையாருக்கு காணப்படுகிறாரா-? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்-ஆசி) சரி. அதற்கு முரண்பாடாக இருந்தால் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-!. (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார் - ஆசி). 28. சகோதரன் டோனி-சேபில் ஒரு கனம்மிக்க மனிதனாக, இந்த சபையிலுள்ள இந்த மந்தைக்கு ஒரு உதவிக்காரராக, டீக்கனாக இருக்கின்ற இந்த பணிக்கு பாத்திரவானாக இந்த சபையினரால் காணப்படுகின்றாரா-? உங்களுடைய கையை உயர்த்துவீர்களா. (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்- ஆசி) அதற்கு மாறாக இருக்குமாயின் உங்கள் வலது கரத்தை உயர்த்துவீர்களா. (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்- ஆசி) 29. சில காலமாக நம்முடன் இருக்கின்ற, இந்த சபையின் நிதியை கையாளுவதற்கும் மற்றும் இதனுடைய ரசீதுகளுக்கு பணம் செலுத்தத்தக்கதாக, செயலாளர்- பொருளாராக இருக்கும் படியாக, ஒரு நியாயமான மற்றும் நீதியுள்ள மனிதனாக சகோதரன் ஹார்னார்ட் இருக்கின்றார் என்று சபையார் உணர்கிறீர்களா-? அப்படியானால், உங்கள் வலது கரத்தை உயர்த்துங்கள். (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்- ஆசி). அதற்கு மாறாக இருக்குமானால், உங்கள் வலது கையை உயர்த்துங்கள் (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார் - ஆசி). 30. இங்கே இந்நேரத்தில், சிலுவையின் அடியில் நின்று கொண்டிருக்கிற இந்த சகோதரரிடத்தில் நான் கூற விரும்புவது என்னவென்றால், (முரண்பாடான கருத்து எதுவுமே இல்லை) தேவன் உங்களை அழைத்திருக்கிறார் என்றும் இந்த பணிக்கு தேவனுடைய பார்வையில் நீங்களெல்லாரும் பாத்திரவானாக காணப்படுகிறீர்கள் என்றும் இந்த சபையானது காண்கிறது. 31. இப்பொழுது "இவர்கள் முதலாவது சோதிக்கப்பட வேண்டும். இந்த அலுவலை விரும்புகின்றனரா என்று பார்க்க வேண்டும்,'' என்ற நீங்கள் கூறியிருக்கிறீர்கள். மற்றும் அவர்கள் இந்த அலுவல்களை விரும்பினால் சில வாரங்களுக்குள்ளாக, தேவனுக்கு சித்தமானால், இவர்களை முறையான தர்ம... அல்லது டீக்கன்களாக இந்த சபையின் பொருளாளர் மற்றும் டீக்கன்களாக ஆக்கும் பொருட்டு இந்த மனிதரின் மீது கைகளை வைக்கத்தக்கதாக நான் திரும்பவுமாக வருவேன். நாம் நமது தலைகளை சற்று தாழ்த்துவோமாக. 32. கர்த்தாவே, உலகத்தாருக்கு முன்பாக தேவபக்தியுள்ளவர்களாக நாங்கள் நடக்கத்தக்கதாக இன்னுமாக பூமியின் மீது மனிதன் ஜீவித்துக் கொண்டிருக்கிறான் என்பதற்காகவும் இந்த விதமாக விதிவிலக்கிற்கு இடந்தராத மிகவும் கண்டிப்பான தனியுரிமை விதிகளையுடைய, (rules) இந்த சபைதங்களை வழிநடத்துகிறவர்களாய் இருக்கும் ஐந்து பேர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்ற, அதற்கு மாறாக ஒரு ஓட்டும் இல்லாதிருக்கிற மிக தேவபக்கியுள்ள இந்த கூடாரத்திற்காகவும் (tabernacle) இன்றிரவு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர்களுக்காக நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம், மேலும் மேய்ப்பர்களாகிய எங்களோடும், குழுமத்தோடும் இந்த தீர்மானங்களை நாங்கள் எடுக்கையில் நீர் எங்களோடு இருந்தீர் என்பதை நாங்கள் உணர்கிறோம். 33. இந்த மனிதரை தேவன் ஆசிர்வதிப்பாராக. இவர்கள் மூலமாக பரலோகத்தில் மிகவும் அதிகமாக சம்பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தவர்களாக, தங்களுடைய முழு இருதயத்தோடும் இந்த பணியில் இவர்கள் சேவை செய்வார்களாக. என்றாவது ஒரு நாளிலே பரலோகத்தின் புஸ்தகங்கள் மூடப்படுகையில் பரலோக ஜீவிகளின் புத்தகமும் மற்றும் பரலோகத்தின் மகத்தான புத்தகமும் திறக்கப்படுகையில் அதில், இவர்களுடைய பெயர்கள் தாமே இரட்சகருக்கும் தேவனுக்கு முன்பாகவும், மற்றும் பரலோகத்தின் எல்லா சேனைகளுக்கும் முன்பாகவும், அவருடைய ராஜ்யத்தில் இதே விதமாக நூறு சதவீதம் இருப்பதாக. அவர்களை ஆசீர்வதியும், கர்த்தாவே, இந்த பணியில் இவர்கள் தாமே சிறந்த விதத்தில் சேவை செய்யட்டும். இவர்களுக்காக இயேசுவின் நாமத்தில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென். 34. நான் உங்கள் கைகளை குலுக்க விரும்புகிறேன், (சகோதரன் பிரன்ஹாம் இவர்களுடைய கைகளைக் குலுக்குகிறார் - ஆசி) சகோதரன் ஹார்னார்ட், மற்றும் சகோதரன் சேபில், மற்றும் சகோதரன் காலின்ஸ், சகோதரன் ஹிக்கர்சன், மற்றும் சகோதரன் டெய்லர். இந்த விதமான மிகவும் கனம் மிக்க மனிதருடன் இவ்வளவு காலமாக நாங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் சரியான நேரத்தில் உங்களை சந்திப்போம், நான் சிறிது ஓய்வு பெற்று மறுபடியுமாக திரும்பியவுடனே உங்களுடைய உத்யோகத்தை எப்படி நீங்கள் விரும்பு கிறீர்கள் என்பதை காண்போம். சரி, இவர்களுடைய ஓட்டுக்களின்படி, முரண்பாடான ஒன்றில்லாமல், நூறு சதவீதம் என்று நான் நினைக்கிறேன். 35. ஓ, தேவனுக்கு முன்பாகவும், மற்றும் இப்பொழுதுள்ள, இந்த விதமான சூழ்நிலையில் இருக்கின்ற இந்த உலகத்திற்கு முன்பாகவும் தேவபக்தியுள்ளவர்களாக இன்றைக்கு ஜீவிக்க முடிகின்ற மக்களுடன் நீங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் உங்களுக்குள் மகிழ்ச்சி கொள்கிறீர்களா-? அது ஒரு அற்புதமான காரியமாகும். 36. இந்த மனிதர் மற்றும் இந்த சபையை என்னுடைய நண்பர்களாக கொண்டிருக்கும் சிலாக்கியத்தை உடையவனாக இருக்கின்றேன் என்பதை அறிந்து கொள்வதில் இன்றிரவு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள தம்முடைய சபையில் தேவன் என்னை ஐக்கியம் கொள்ளச் செய்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, விமர்சிக்கப்படுகிறார்கள், இன்று காலை என்னுடைய செய்தியில் நான் கூறின விதமாக, ஒருக்கால் சகதி பூசினவர்களாக இருப்பர், உலகம் அவ்வாறு அவர்களை பார்க்கின்றது - ஒரு ''தீவிர மதவெறி பிடித்த கூட்டமாக''. ஆனால் தேவனோ அவர்களை தம்முடைய பிள்ளைகளாக பார்க்கின்றார். அதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த முழு வானமண்டலத்தைக் குறித்தும், அது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் குறித்து அவர்களால் கூற முடியாது தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிற ஒரு காரியம் உண்டு, தாங்கள் மறுபடியும் பிறந்த மணி நேரத்தை அவர்கள் அறிந்துள்ளனர். அவர்களுக்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 37. நான் கற்றுக் கொண்ட ஒரு சிறு உவமை, அது இன்றிரவு நமக்கு மிகவும் தத்ரூபமாக ஆகத்தக்கதாக, அதன் பொருளை நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, அந்த உவமையை என்னுடைய சிறிய பெண் பிள்ளைகளோடு நான் பொருத்தப்போகிறேன். ஒரு காலை பொழுதில், படுக்கையை விட்டு எழுந்திருக்கையில்... எனக்கு இரண்டு சிறு மகள்கள் உண்டு. அவர்களில் ஒருத்தி ரெபெக்கா, இன்னொருவள் சாரா, அவர்கள் இருவரும் அப்பாவின் சிறு பெண் பிள்ளைகள். 38. எனக்கு ஜோசப் என்கின்ற சிறு பையன் இருக்கிறான். சட்டனூகாவில் கடைசி கூட்டங்கள் நடைபெற்றது. ஒரு நாள் இரவு கூட்டத்திலிருந்து நான் வந்து கொண்டிருக்கையில், என்னுடைய மூத்த மகன் பில்லியுடன் நான் காரில் இருந்தேன். அவனுடைய மனைவியும், மேடாவும், மகள்களும் காரில் இருந்தனர். நாங்கள் காரோட்டி வந்து கொண்டிருக்கையில், அநேக நகரங்கள் கடந்து வந்தும் யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த இரவு அந்த மக்கள் செய்து கொண்டிருந்ததைக் குறித்து மிகவும் கடிந்துக் கொண்டு பேசினேன். சிறு ஜோசப் தாண்டி என்னிடம் வந்து என் தோளை பற்றிக் கொண்டு ''அப்பா, இன்றிரவு நீர் கடினமாக பிரசங்கித்தீர்!'' என்றான். 39. ஆகவே இக்காலை நான் புறப்பட்டு எய்த் மற்றும் டென்த் தெருவிற்கு அந்த ... இல்லை பென் மற்றும் டென்த் தெருவிற்கு நான் செல்கையில், மனைவியும் இரண்டு பெண்பிள்ளைகளும் - யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை, சிறு ஜோசப் மறுபடியுமாக என் தோளைப் பற்றிக் கொண்டு, "அப்பா, இக்காலை பிரசங்கம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றான். நான், "ஓ, நான் ஒரு ரசிகனைப் பெற்றுக் கொண்டேன், அது என்னுடைய மகன்” என்றேன். 40. இப்பொழுது நம்முடைய சிறு உவமைக்குச் செல்வோம். ஒரு நாள் காலை, அறையில் உட்கார்ந்திருந்த போது, சிறு பெக்கி ஓடி வந்து, என் காலை பரப்பச் செய்து அவள் என்னை சுற்றி கரத்தைப் போட்டாள். அவள் அப்பாவின் சிறு பெண் பிள்ளை. அவள் என்னை அணைத்துக் கொண்டிருந்தாள். பிறகு சிறு சாராளும் கட்டிலிலிருந்து குதித்து தன்னுடைய சிறு பைஜாமா உடையுடன் ஓடி வந்து, அடுத்ததாக வந்தாள். அவள் சிறு பழுப்பு நிறக் கண்களை உடையவள் ஆவாள். 41. சிறு பெக்கி, "ஓ, சாரா, நீ வர வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் முழு அப்பாவும் என்னிடம் இருக்கிறார். அப்பா முழுவதும் எனக்குத்தான்-!'' என்று கூறினாள். சிறிய சாராளோ, அவளுடைய சிறு உதடுகள் கீழே தொங்கிவிட்டது, அவளுடைய சிறு பழுப்பு நிறக் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. நான் இந்த விதமாக சைகை செய்து இன்னொரு முழங்காலை வெளியே நீட்டினேன், அவள் வந்து அமர்ந்து கொண்டாள். 42. பெக்கிக்கு நீண்ட கால்கள் இருந்தன, ஆகவே அவை தரையைத் தொடுகின்ற அளவுக்கு இருந்தன. சிறு சாராளோ, தத்து நடையிட்டு (toddling) வந்தாள்.ஆகவே நான் சாராளின் மீது என் இரண்டு கரங்களையும் வைத்து இழுத்து அணைத்தேன். சிறிய சாராள் பெக்கியை நோக்கிப் பார்த்து, "பெக்கி, நீ வேண்டுமானால் முழு அப்பாவையும் வைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அப்பா என் முழுவதையும் வைத்துக் கொண்டிருக்கிறாரே-!'' என்று கூறினாள். 43. அதே விதமாகத்தான் இங்கேயும் கூட என்று நான் நினைக்கிறேன். நமக்கு எல்லா வேதக்கல்லூரி அறிவும், எல்லா மகத்தான கிரேக்க வார்த்தைகளும் நமக்கு தெரியாமல் இருக்கலாம், இந்த மக்கள் கூட்டத்திற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு காரியம் நிச்சயம், நம்முடைய எல்லாவற்றையுமே இயேசுவானவர் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். சரி, சகோதரன் நெவில். *******